சுவீடனில் குறைகிறது கொரோனா தொற்று!

You are currently viewing சுவீடனில் குறைகிறது கொரோனா தொற்று!

அதிக கொரோனா இறப்பு ஏற்பட்ட நாடுகளில் ஸ்வீடன் நாடும் இடம்பிடித்துள்ளது எல்லோரும் அறிந்ததே 100,000 க்கு 54.8 இறப்புகள் ஏற்பட்டுள்ளன .

ஆயினும்கூட இப்போது தொற்றுவீதம் சரியான திசையில் நகர்கிறது என புள்ளிவிவரங்கள் காட்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

புள்ளி வரைவுப்படி மிக மோசமான கெரோனா தாக்கத்திலிருந்து படிப்படியாக குறைந்து வருவதாக நோர்வேயின் பிரபலமான செய்தித்தாள்(VG) தெரிவித்துள்ளது.

இதேவேளை சுவீடன் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி ஏப்ரல் 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 115 பேர் இறந்த நாட்களே அதிகமானதாக பதிவாகி இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அதேவேளையில்

ஜூலை 8 என்பது மிகக் குறைவான கொரோனா தரவுகளை கொண்ட நாள் எனவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை ஒரு கொரோனா மரணம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜூலை 10 வரை ஸ்வீடனில் கொரோனா இறப்புகளின் விகிதம் குறைவடைந்த நிலையில் நகர்வதாக சுவீடன் சுதகாதார பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நோர்வேயின் பத்திரிகை (VG)தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள