டிரம்பின் வருகை நட்புறவை வலுப்படுத்தும்; பிரதமர் மோடி!

  • Post author:
You are currently viewing டிரம்பின் வருகை நட்புறவை வலுப்படுத்தும்; பிரதமர் மோடி!

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகை இரு நாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி உறுதிபட கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இன்று இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். 
அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.  அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து நேராக அகமதாபாத் நகருக்கு வரும் டிரம்ப் அங்குள்ள, மோதேரா மைதானத்தில் நடைபெறும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதற்காக அமெரிக்காவில் இருந்து தனி விமானத்தில் அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் புறப்பட்டார்.  அவர் இன்று நண்பகல் அகமதாபாத் நகருக்கு வந்து சேர்கிறார்.

இதுபற்றி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வருகைக்காக இந்தியா ஆவலுடன் காத்திருக்கிருது.  நம்முடைய இரு நாடுகளின் நட்புறவை உங்களுடைய பயணம் நிச்சயம் மேலும் வலுப்படுத்தும்.  அகமதாபாத் நகரில் உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

பகிர்ந்துகொள்ள