டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக, தமிழர் விளையாட்டு துறையினரால் 11 ஆவது தடவையாக 25.02.2023 சனிக்கிழமை அன்று வைல நகரில் சிறப்பாக நடைபெற்றது.
இச் சுற்றுப்போட்டியானது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றிஇ மலர்வணக்கம் செலுத்தி கொண்டு அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டன. நடைபெற்ற போட்டிகளில் இம்முறை 13 அணிகள் பங்கேற்று சிறப்பித்தன. இம்முறை முதன் முதலாக பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் அதே மைதானத்தில் நடைபெற்றது.
மிக விறுவிறுப்பாக நடைபெற்ற நால்வர் அடங்கிய கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் The Boss கழகத்தை எதிர்த்து போட்டியிட்ட Vejle விளையாட்டுக் கழகம் வெற்றியை தமதாக்கிக் கொண்டது.
பார்வையாளர்களின் உற்சாகத்துடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இச் சுழல் கிண்ணத்திற்கான சுற்றுப் போட்டியில், இதுவரை தொடர்ந்து முன்றுமுறை எந்தக் கழகங்களும் வெற்றிபெற்று, சுழல் கிண்ணத்தை தமதாக்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற அணிகளின் விபரங்கள்:
1. இடம்: Vejle
2. இடம்: The Boss
3. இடம்: R.Young
சிறந்த விளையாட்டு வீரர்: தயாபரன் (Vejle)
கரப்பந்தாட்ட போட்டியை தொடந்து நடைபெற்ற பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பல பிரிவுகளாக ஆட்டங்கள் இடம் பெற்றன. முதல் முறையாக நடைபெற்ற இச் சுற்றுப்போட்டியில் போட்டியாளர்கள் மிக ஆர்வமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்:
தனிநபர் பிரிவு ஆண்கள்:
1.இடம். நவீன்
2.இடம். ஸ்ரெபான்
3.இடம். ஆகாஸ்
இரட்டையர் பிரிவு பெண்கள்:
1.இடம். நிலானிஇ ஈழமி
2.இடம்.அஜித்தாஇ ஸ்ரீனா
3. இடம்.சிவாஜினிஇ தர்ஜினி
இருபாலர் பிரிவு (Mix):
1.இடம். ஆகாஸ்இ சிவாஜினி
2.இடம். அனுலன்இ ஈழமி
3.இடம். பிரகாஸ்இ தர்சினி
இரட்டையர் பிரிவு ஆண்கள்:
1.இடம். நவீன்இ ஸ்ரெபன்
2.இடம். அனுலன்இ அஜித்ரன்
3.இடம். பிரகாஸ்இ டானியல்
சிறந்த இளம் ஆட்ட வீரர்:
ஆகாஸ் பிரகாஸ்
பல நூறு மைல்களுக்காப்பால் இருந்து ஆர்வமாக கலந்து சிறப்பித்த அனைவருக்கும், டென்மார்க் தமிழர் விளையாட்டுத் துறை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறுதியாக “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதியேற்புடன் இச் சுற்றுப் போட்டிகள் இனிதே நிறைவு பெற்றது.