டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்!

You are currently viewing டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள்  நினைவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கண்காட்சி 16.05.2026 அன்று டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் ஆரம்பமானது. முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி,  அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என எந்தவித வேறுபாடும் இன்றி தமிழன் என்ற காரணத்தினால் இரத்த வெறி பிடித்த அரச பயங்கரவாதம் எம் உறவுகளை கொத்துக்கொத்தாய் கொன்று குவித்தது. அந்தக்காட்சிகளையே இன்று கண்காட்சிகளாக வைத்து, பல்லின மக்களுக்கு காட்டி, சர்வதேசத்திடம் எமது மக்களுக்கு நீதி வேண்டி நிற்கிறோம். கண்காட்சி நடைபெறும் இடத்தில் டென்மார்க் மற்றும் வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.
இக் கண்காட்சி நிகழ்வு நாளை (17.05.2026) Kong. Nytorv சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 1
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 2
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 3
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 4

டென்மார்க்கின் கொல்பேக் நகரில் உள்ள புனித எலிசபெத் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வழிபாடு.

கடந்த 13.05.2026 அன்று டென்மார்க்கில் கொல்பேக் நகரில் உள்ள புனித எலிசபெத் தேவாலயத்தில் முள்ளிவாய்க்காலில் இனவழிப்பில் உயிர்நீத்த மக்களுக்கு சிறப்பு வழிபாடும், திருப்பலி நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களால் அகவணக்கம் மலர் வணக்கம் மற்றும் ஈகைச்சுடரேற்றல் மிகவும் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.​

டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 5
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 6
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 7
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 8
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 9
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 10
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 11
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 12

டென்மார்க் Naestved கற்பக விநாயகர் ஆலயத்தில்  கடந்த வெள்ளிக்கிழமை

(15.05.2026) அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் வழிபாடு மிகவும் எழுச்சியுடன் நடந்தேறியது. இந்நிகழ்வில்  மக்கள் உணர்வுபூர்வமாக நெய்விளக்கேற்றி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இவ்வேளையில் ஆலயத்தில் ஆத்மசாந்தி பொதுப் பிரார்த்தனை பாடல்கள் பாடப்பட்டு வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

​

​

டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 13
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 14
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 15
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 16

டென்மார்க் Grindsted நகர தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை 17.05.2026 அன்று டென்மார்க்கின் கிறின்சட் நகரில் உள்ள தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தலும் திருப்பலிப் பிரார்த்தனையும் மிகவும் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது.

அருட்தந்தை Bjarke Friis அவர்களினால் தோத்திரப் பாடல்கள் பாடப்பட்டு திருப்பலி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசேடமாக தேவலாயத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அருட்தந்தை அவர்கள் முதன்மைச் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் நீதிக்கு மாறாக இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கு மலர் வணக்கம் மற்றும் சுடர் வணக்கமும் பொதுமக்களால் செலுத்தப்பட்டதோடு நினைவேந்தல் உரையும் இடம்பெற்றது. நினைவேந்தல் நிகழ்வின் நிறைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியின் சிறப்பை எடுத்துரைத்து வருகை தந்தவர்களுக்கு கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.

டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 17
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 18
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 19
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 20
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 21
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 22
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 23
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 24
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 25
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 26
டென்மார்க்கில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் நினைவுகள்! 27

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply