கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 49 பேர் கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட 9 பேர் மற்றும் ஒரு தடுப்பூசியை செலுத்தி கொண்ட 40 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட் தொடர்பான இணைப்பதிகாரி மருத்துவர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் உயிரிழக்க காரணமாக அவர்களுக்கு வேறு நோய்கள் இருந்துள்ளமை பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 3524 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளாதவர்கள் என தகவல்கள் தெரவிக்கின்றன.
இது மரணங்களில் 70 வீதம் என கருதப்படுகிறது.
எனவே உயிரிழப்புகளை குறைக்க துரிதமாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.