கேரளா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், அங்கு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, நேற்று இரவு காவல்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு ஒரு பாரவூர்தி மூலம் சென்றது. அந்த பாரவூர்தியை காவல்த்துறை தடுத்தி நிறுத்தி, சோதனை செய்தனர்.
அப்போது லாரியில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த லாரியை ஓட்டி வந்த பிரபு மற்றும் ரவி ஆகிய இருவரை வாளையார் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் காவல்த்துறை நடத்திய விசாரணையில், அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கடத்த முயன்றது தெரிய வந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 7,500 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்