தமிழன் நிமிர்ந்தநாள்!

You are currently viewing தமிழன் நிமிர்ந்தநாள்!

தமிழ்ப் புதிய புலிகளாய்
பிறப்பெடுத்து
தமிழீழ விடுதலைப்புலிகளாய்
சிறப்பெடுத்து
வரலாற்றுச் சரித்திரம்
நிறுவியநாள்!

மாறி மாறி ஆண்டவனின்
அதிகார அத்துமீறலில்
கூனிக்குறுகி வாழ்ந்து
அரசியல் அடிவருடிகளாய்
வளைந்து நெளிந்து போன இனத்திற்கு!

கூன் நிமிர்த்திக்காட்டவென
தானைத்தலைவன்
தமிழ்ச்சேனையை
உருவாக்கிய நாள்!

ஆயிரம் பலங்கொண்ட
யானைகளாய்
திரண்டாலும்
உயிர் போகும்வரை
உரிமைக்கான போர்
உறங்காதென
விடங்களை சுமந்தவர்
நாள்!

உலக
இராணுவ படைகளுக்கெல்லாம்
ஒழுக்கத்தின்
நெறிமுறைகளை
கடைப்பிடித்துக்காட்டிய
தலைவன் மடியில்
நெறிபிறழா நேர்மையை படித்த
புலிக்குட்டிகளின்
நாள்!

இதுவே
இனமானத்தமிழனின்
அடையாளமாகவும்
ஆன்மபலமாகவும்
உலகவரைபடத்தில்
முகவரியானது!

✍தூயவன்

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments