தமிழினப் அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி!

You are currently viewing தமிழினப் அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி!

தமிழினப் அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரியும், இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது.

“தமிழ் மக்களின் நீதிக்கான குரல்   முனைவு வலையகல் முதல் ஜெனீவா வரை  வரலாற்றை மறைக்க முடியாது   நீதியை மறுக்கவும் முடியாது!” என்ற கோரிக்கையுடன் இந்தப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 13.09.2026, காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, யாழ்ப்பாண நகரில் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “சர்வதேசமே இனியும் வேண்டாம் தாமதம்..!” என வலியுறுத்தி, தமிழினப் படுகொலை தொடர்பில் சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், தமிழர்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பேரணிக்கான அறிவிப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச விசாரணை பொறிமுறை, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு கிழக்கில் இராணுவத் தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வருதல், தமிழர்களின் நில உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply