தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடற்தொழில் அமைப்புக்களுடன் சந்தித்து கலந்துரையாடல்!

You are currently viewing தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடற்தொழில் அமைப்புக்களுடன் சந்தித்து கலந்துரையாடல்!

தமிழர் தாயக கடற்பரப்பில் நிகழும் ஆக்கிரமிப்பின் மூலம்  கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்த கலந்துரையாடலொன்று தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் டக்ளஸ் போல் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

இன்று காலை 10.30 மணிமுதல் மாலை 1.30 மணிவரையில் யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில்  குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கடற்றொழிலாளர்களின் அவசிய பிரச்சினைகள் ஆராயப்பட்டதுடன், தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய செயற்பொறிமுறைகள் குறித்து பரந்துபட்ட அளவில் கடற்தொழிலாளர் அமைப்புக்களை ஒன்றிணைத்து செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடற்தொழில் அமைப்புக்களுடன் சந்தித்து கலந்துரையாடல்! 1
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடற்தொழில் அமைப்புக்களுடன் சந்தித்து கலந்துரையாடல்! 2
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடற்தொழில் அமைப்புக்களுடன் சந்தித்து கலந்துரையாடல்! 3
பகிர்ந்துகொள்ள

Leave a Reply