கிளிநொச்சியில் சிறீலங்கா காவற்துறை துப்பாக்கி சூடு!

You are currently viewing கிளிநொச்சியில் சிறீலங்கா காவற்துறை துப்பாக்கி சூடு!

கிளிநொச்சியில் இன்று(01) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சிறீலங்கா காவற்துறையினரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக  தெரியவருகின்றது

கிளிநொச்சி – தருமபுரம் சிறீலங்கா காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த டிப்பர் வண்டியை சிறீலங்கா காவற்துறையினர் சோதனையிட முற்பட்ட போது, சிறீலங்கா காவற்துறையினரின் சமிக்ஞையையும் மீறி வண்டி நிறுத்தப்படாமல் அதிவேகமாக பயணித்துள்ளது.

இதனால், சிறீலங்கா காவற்துறையினர் டிப்பர் வண்டியை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக,  டிப்பர் வாகனத்தின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன  பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

மேலும், டிப்பர் வாகனத்தைச் செலுத்திய சாரதி தப்பி ஓடியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக தர்மபுரம் சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply