தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர் திரு. அய்யநாதன் அவர்களும்,ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திரு. வசீகரன் அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு. வன்னி அரசு அவர்களும், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு. சார்லஸ் வெற்றிவேந்தன் அவர்களும், மக்கள் பாதை இயக்கத்தின் மாநில பொருளாளர் திரு. கோபிநாத் அவர்களும், தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. ஜி.ஜி.சிவா அவர்களும், டிசம்பர் 3 சென்னை டீமின் தலைவர் திரு. டேவிட் அவர்களும், சுய ஆட்சி இயக்கத்தின் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களும்,தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் திரு.கம்பம் குணா அவர்களும்,புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பின் நிறுவனர் திரு. சீ.சு.சுவாமிநாதன் அவர்களும், மூத்த பத்திரிக்கையாளர்,லா எக்ஸ்போஷர்ஸ் ஆர்டினன்ஸ்ன் தலைவர் திரு. சௌந்தரராசன் அவர்களும்,மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் திரு. முஹம்மது அஸாருதீன் அவர்களும்,மெரினா ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவின் மாநில தலைவர் திரு. ஜலீல் அவர்களும்,
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ் மாநில செயலாளர் ஷேக் ஒலி அவர்களும்,மூத்த பத்திரிகையாளர் திரு. காரை மைந்தன் அவர்களும், பீம் இந்தியா அமைப்பின் தலைவர் குமார் அவர்களும் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள்.தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் வீ. மணிகண்டன் அவர்களுக்கும்,திரு. வடசேரி சீனு அவர்களுக்கும், தோழர் தமிழன் குணா அவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி 🙏
இலயோலா மணி
தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு
21.05.2022



