தமிழ்மண்ணில் தொடரும் நில அபகரிப்பு!

You are currently viewing தமிழ்மண்ணில் தொடரும் நில அபகரிப்பு!

வவுனியா, வடக்கு நெடுங்கேணி  வெடிவைத்தகல் கிராமத்திற்குள் மக்கள் உட்செல்ல இராணுவத்தினரும், வனவள திணைக்களத்தினரும் தடைவிதித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னர் குடியேற்றங்கள் எதுவும்  இல்லை. அப்பகுதியில் போருக்கு முன்னர் சிறுவர் பாடசாலை ஒன்று இருக்கின்றது. அப் பாடசாலையில் வயலுக்கு செல்பர்கள் மட்டுமே தங்கியிருந்து வயலுக்கு செல்வார்கள். 

ஆனால் அப்பகுதிகுள் உட்செல்வதற்கோ காணிகளை துப்புரவு செய்யவோ இராணுவமும், வனவள திணைக்களத்தினரும் தடை செய்து வருகின்றார்கள். 

குறித்த பகுதியில் வசித்த மக்கள் தம் காணிகளுக்கான உறுதி ஆவணங்களை வைத்திருக்கின்ற போதும்,  வெடிவைத்தகல் கிராமத்தில்  இராணுவத்தினர் முகாம் அமைத்து இருப்பதனால் குறித்த பகுதியில் மக்கள்  உட்சென்று துப்பரவு பணிகளை மேற்கொள்ள தொடர்ந்தும் தடைவிதித்து வருகின்றனர். 

இக் கிராமத்தில் ஆரம்பத்தில் 65 குடும்பம் வசித்து வந்த நிலையில் தற்போது  15 குடும்பத்தினர் இக்கிராமத்தில் உள்ள தமது சொந்த காணிக்குள் குடியேறுவதற்கு  கிராம சேவையாளர், பிரதேச செயலாளரின் அனுமதி கடிதத்தினை இராணுவம், வனவளதிணைக்களத்தினருக்கு வழங்கியிருந்தும், கிராமத்தில்  உள் நுழைவதற்கான அனுமதி பத்திரத்துடன்  குறித்த பகுதியில் உள்ள தம் சொந்த காணிகளினை துப்பரவு செய்ய  சென்ற போது இராணுவத்தினர்  குறித்த கிராமத்திற்குள் உட்செல்ல தடைவிதித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதிக்குள் பொதுமக்கள்  உட்செல்ல இராணுவத்தினர்  தடை விதித்த நிலையில் இது தொடர்பாக வவுனியா  மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலீபனிடம்  இது தொடர்பாக  முறையீடு செய்த போது  இவ்விடயம்  தொடர்பாக உரிய தீர்வினை பெற்றுதருவதாக எமக்கு  கூறியிருந்தும்  இதுவரை  எமக்கான நீதி  கிடைக்கவில்லை என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் குறித்த பகுதிக்குள் அம்மன் ஆலயம் இருப்பதனால் வருடா வருடம் வரும் பங்குனி  திங்கள் உற்சவத்தினை நடாத்துவதற்கு மட்டும் ஆலய வளாகத்தினை சுத்தப்படுத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் குறித்த பகுதி மக்கள் நேற்று  அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பகிர்ந்துகொள்ள