தமிழ் எம்.பிக்களின் போராட்டம் – நாடாளுமன்றில் பதற்றம்!

You are currently viewing தமிழ் எம்.பிக்களின் போராட்டம் – நாடாளுமன்றில் பதற்றம்!

வெடுக்குநாறிமலையில் சிறீலங்கா காவற்துறையின் அராஜகத்தைக் கண்டித்து இன்று(19) பாராளுமன்றத்தில் கஜேந்திரன் எம்.பி காட்டம்!

சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய வழிபாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் எம்.பி.க்கள் இன்று சபையில் போராட்டம் நடத்தியதையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 8 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் எட்டு பேரும் கைது செய்யப்பட்டதாக தமிழ் எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பில் ஆராயவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்நிலையில் எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அனைத்து மக்களுக்கும் அந்தந்த மதங்களை கடைபிடிக்கும் உரிமை இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் உள்ள விடயங்களில் அரசாங்கம் தலையிட முடியாது என தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

“பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களை எங்களால் விடுவிக்க முடியாது. அவர்கள் நீதிமன்றத்தால் மட்டுமே விடுவிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments