இலங்கைத் தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதே இலங்கைக்கு நன்மையாக அமையும் என்று இந்தியா நம்புகிறது என இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வீ. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய ராஜ்யசபாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் என்பன தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் ஊடாக, தமிழ் மக்களது உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவது, இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.