தர்மம் தவித்த மே மாதம் !

You are currently viewing தர்மம் தவித்த மே மாதம் !

தர்மம் தவித்த மே மாதம் !
ஆத்ம ஜீவனின் ஆறாத காயம்!
கண்ணீர் அலையில் போராட்டம்!
உலகம் கண்டும்கானா மயிலாட்டம்!
நிலமும் வளமும் பறிபோனது மனிதம் அங்கு பலியானது!
உயிர் ஓலம் கேட்டு செவிடானது!
உரிமைக்குரலை உலகம் திருட உண்மை கருகி பொய்யானது!
ஆழி அலையும் இறுக்கியடிக்க
வானும் கருகி நீறானது காற்றுக்கூட விஷமானது
நாளும் பொழுதும் ரணமானது …

பஞ்சம் பசி மீறி நோயானது!
குடி கஞ்சி இன்றி உயிர் போனது!
அஞ்சி அஞ்சி உயிர் பிடித்தோம் கொடும் குண்டு மழையில் முடமானோம்!
தொல்லை என்றொரு சொல்லில்லை
வெல்வோம் வெல்வோம்
விடியும் என்றே தவம் கிடந்தோம்!
இறுதிவரை வலி சுமந்தோம்
பகை இறுக நின்றும்
திடம் கொண்டோம்!
வாழ்வா சாவா முடிவாச்சு
வரிந்து நின்று எதிர் கொண்டோம்!
கொண்ட கொள்கை என்றும் மாறாது தமிழ் ஈழம் தீராது …

வேள்வித்தீ .. உடன் வளர்த்தோம்!
செந்தணலில் நின்று தீக்குளித்தோம்!
ஏழ் கடலும் கலங்கி நின்றது!
ஆகாயம் சிவந்து குமுறியது!
கண்டோர் கதைத்தோர் பிணமானார்!
எரி குண்டில் பொசுங்கி புளுவானார்!
தாய் சேய் பிள்ளை மகவெல்லாம் புதை குழிக்குள் புதைத்தே
உயிர் நீர்த்தார்!
நெஞ்சம் கிளர்ந்து மண் அழ கொடும் வேள்வி அடங்கிப்போனது …

அமைதி வளையம் சுடு காடு!
இறை கோவில் பள்ளி உழுதாச்சு! மருத்துவமனைகளில்
தறியுண்ட உடல்கள்
தைக்கவும் பொருத்தவும் மருந்தின்றி அவலத்தின் அலைகள்!
கிபீர் குண்டு வீச்சினால் எத்தனை கொலைகள் பிள்ளையை தொலைத்தவர் தாயைத்தொலைத்தார்
எல்லாம் தொலைந்தபின் அனாதையானவர்
எத்தனை எத்தனை!!!!
விதவைகள் கோலத்தை
எப்படி விபரிக்க?
கண்களில் இரத்தம்தான் ஏன் இந்த சோதனை!
இரவிலும் பகலும் புலிவேட்டை! பெண்கள் பிள்ளைகள்
நரை வேட்டை !
கற்பை அறுத்து தின்றது காடையர் பெரும் படை !
தாயை தங்கையை புணர்ந்தான்!
தனயன் முன்னே உரிந்தான்! அவள் மார்பை கிள்ளி எறிந்தான்!
!ஆண்கள் கண்ணை குத்தி மகிழ்ந்தான்
ஐயோ ….பூகம்பம் வெடிக்காதோ வானம் இரண்டாக பிளக்காதோ! இறைவா நீ என்ன பொய்தானோ எம் முடிவும் உனக்கும் சுகம் தானோ …

முள்ளிவாய்க்கால் முடிவல்ல! தம் மூச்சை விதைத்தோர் விளைநிலம் கடலும் அலையும் உச்சரிக்கும் அதை காற்று மீண்டும் பிரசவிக்கும்!
தமிழ் ஈழம் என்றே உச்சரிக்கும் மீண்டும் புலிக்கொடி
வான் பறக்கும் …

வே.புவிராஜ்
(Stavanger, Norway)

பகிர்ந்துகொள்ள