Åsane விலுள்ள “Kidsa Haukedalen” மழலையர் பள்ளியில், அதன் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ‘Bergens Tidende’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
தொற்றுக்குள்ளான நபரின் குழுவில் இருந்த குழந்தைகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பின் காரணமாக அவர்களுடன் ஒத்துழைத்து செயற்பட்ட மற்றுமொரு குழுவையும் தனிமைப்படுத்தலில் வைத்துள்ளோம் என்று பொது மேலாளர் ‘Inger Marie Guddal Einan’ பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
நோய்த்தொற்றின் காரணம் தெரியவில்லை என்றும் ஆனால் மழலையர் பள்ளியில் தொற்று ஏற்பட்டதாக அவர்கள் நம்பவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.