தாயகத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் உயிரிழப்பு!

You are currently viewing தாயகத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்று (22) கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோனிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றவேளை, கட்டுமரத்தில் இருந்து தவறி கடலினுள் விழுந்து அவர்   உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை

திருகோணமலை – சல்லி பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்  இருவரை மூன்று நாட்களாக காணவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சல்லி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய  குட்டிராசா சசிக்குமார் மற்றும் 22 வயதுடைய முருகையா சுஜந்தன்   என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 20 ஆம் திகதி காலை 10 மணியளவில் இவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில்  கிடைக்கவில்லை என உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களை தேடி பத்துக்கும் மேற்பட்ட சல்லி பிரதேச மீனவர்கள்  சென்றுள்ளதாகவும்,

சம்பவம் தொடர்பில் சிறீலங்கா கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments