கடந்த (14.08.2006) அன்று தமிழர் தாயகத்தின் முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது சிறீலங்கா வான் படை நடாத்திய மிலேச்சுத் தனமான குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட54 , பாடசாலை மாணவியர் உட்பட 61,பேரின், 17.ம், ஆண்டு நினைவு நிகழ்வுகள் எதிர்வரும் 14.08.2023, திங்கட்கிழமை தாயகத்தில் உணர்வு பூர்வமாக நினைவு கூறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி கல்வி வலயத்திற் உட்பட்ட சாதாரண தர மற்றும் உயர்தர மாணவிகளுக்கான நான்கு நாள் வதிவிட அனர்த்த முகாமைத்துவ பயிற்சி ஒன்று செஞ்சோலை வளாகத்தில் நடைபெற்றது அந்த பயிற்சி நெறியில் கலந்து கொண்ட மாணவியர் மீதே சிறீலங்கா வான் படைக்குச் சொந்தமான நான்கு அதிவேக மிகை ஒலி “கிபிர்” குண்டு வீச்சு விமானங்கள் கண்மூடித் தனமாக குண்டுத்தாக்குதல்களை நடாத்தியிருந்தன.
காலை வேளை நன்கு திட்டமிட்டு நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 130,ற்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்ததுடன் பலர் அபயவங்களையும் இழந்திருந்தனர்.
அதேவேளை இந்தப் படுகொலைச் சம்பவம் தாயகம் உட்பட அனைத்து தமிழ் மக்களையும் பெரும் சோகத்திற் உள்ளாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.