உச்சிப்பிள்ளையார் மலையில் பௌத்த சின்னங்களை நிறுவும் முயற்சி தடுத்து நிறுத்தம்.

You are currently viewing உச்சிப்பிள்ளையார் மலையில்  பௌத்த சின்னங்களை நிறுவும் முயற்சி தடுத்து நிறுத்தம்.

திருகோணமலை
நிலாவெளி வீதியில் பெரியகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் மலையில் இன்று (09.08.2023) வியாழக்கிழமை சிங்கள கடும்போக்கு பௌத்த பிக்குகளால் அடாத்தாக ஆக்கிரமித்து பௌத்த சின்னங்களை நிறுவும் முயற்சி பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பிக்குகளின் இந்த அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்து கடந்த (06.08.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்களுடன் இணைந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் அப் பகுதியில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டது.

அத்துடன் இது விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்றைய நாள் பிக்குகளால் மேற்கொள்ளப்பட இருந்த இந்த அடாத்தான முயற்சி அரச அதிபரின் உத்தரவிற் அமைய நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை சைவமக்களின் குறித்த
வரலாற்று வழிபாட்டிடத்தை 2015,ம் ஆண்டு தொல்லியல் திணைக்களம் பௌத்த தொல்லியல் சான்றாக அடையாளப்படுத்தியதோடு அங்கிருந்த நாகதம்பிரான் சிலையை சிங்களக் காடையர்கள் உடைத்து அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உச்சிப்பிள்ளையார் மலையில் பௌத்த சின்னங்களை நிறுவும் முயற்சி தடுத்து நிறுத்தம். 1

உச்சிப்பிள்ளையார் மலையில் பௌத்த சின்னங்களை நிறுவும் முயற்சி தடுத்து நிறுத்தம். 2

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments