கொரொனா தொற்று காரணமாக உயிரிழந்திருந்த 20 பேரின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வவுனியாவைச் சேர்ந்த ஒருவருடன் பெண்கள் ஒன்பது பேர் மற்றும் ஆண்கள் 11 பேர் இவ்வாற உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 20 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் தகவலை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக வவுனியா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 79 வயதுடைய பெண் ஒருவர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 14 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மரணத்திற்கு கொவிட் நியூமோனியா நிலைமையே காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மே-07 முதல் மே-15 வரையான காலப்பகுதியில் குறித்த 20 பேரும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே – 07 ஆம் திகதி – ஒருவர்
மே – 08 ஆம் திகதி – ஒருவர்
மே – 11 ஆம் திகதி – ஒருவர்
மே – 12 ஆம் திகதி – 02 பேர்
மே – 13 ஆம் திகதி – 02 பேர்
மே – 14 ஆம் திகதி – 06 பேர்
மே – 15 ஆம் திகதி – 07 பேர்
இவ்வாறு, ஆண்கள் 11 பேர் மற்றும் பெண்கள் 09 பேர் என மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 921 இல் இருந்து 941 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.