தியாகத்தீ இரண்டாம்நாள்

You are currently viewing தியாகத்தீ இரண்டாம்நாள்

ஒரு பூவின்
புன்னகையாய்
அழகாய் பூக்கும்
அவனது இதழ்கள்
இரண்டாம் நாளினை
நீராகாரமின்றி
அரவணைக்கிறது!

உறுதி குலையாத வீரனின்
உருகும் உடலை பார்க்க
உணர்வால்
கொத்துக்கொத்தாய்
குவிந்தனர்
இளையோர்!

ஒரு
வரலாறு மையம்கொண்ட
அரங்கிலே
அவனுக்காய்
பாக்களை காணிக்கையாக்குவதற்காய்
பெயர்களை
பதிவுசெய்தனர்!

மக்களோடு
பேசவேண்டுமென துடித்த
உதடுகள்
ஒலிவாங்கியில்
ஓர்மமாய்
உரிமைக்காய்
ஓங்கி ஒலித்தது!

நாம்
உறுதியோடு
இலட்சியத்தில்
இருக்கின்றோம்
என்னோடு இருந்து
இறுதியாக
விடைபெற்ற
மில்லர் சொன்ன
வார்த்தைகள்
என் நினைவுச்சுவரை தட்டுகிறது
அது
நான் மக்களுக்காக
மகிழ்ச்சியாக
போகிறேன்
ஆனால்
விடுதலைபெறுவதை
கண்ணால்
காணமுடியாது
அதுதான்
ஏக்கமாகிறது
என்றான்
இப்படித்தான்
650 மாவீரர்களும்
மடிந்தார்கள்!

நானும்
அப்படித்தான்
தேசியத்தலைவரிடம்
விடைபெற்றபோது
ஒன்றைச்சொன்னார்!
நீ முன்னால் போ
நான் பின்னால்
வருகிறேனென்று
உயிருக்கு அஞ்சாத
உன்னதமான
தலைவனின் வழியில்
நிச்சயமாக
விடுதலையடைவோம்!
அதை வானத்திலிருந்து 650 மாவீரர்களோடு சேர்ந்து
நானும் பார்த்து மகிழ்வேன்
தலைவரோடு
சேர்ந்து
போராடுங்கள்
நான் போய்வருகிறேனென
சத்தியத்திற்காய்
சாகத்துணிந்த
தியாகச்செம்மலின் வார்தைகள்
எல்லோர்
இருதயங்களையும்
கண்ணாடியாய்
நொருக்கியது!

நின்றுபேசமுடியாது
இருந்துபேசியபோது
நாளை சுயநினைவோடு
இருப்பேனோ
தெரியாது
என்ற வார்த்தைகளும்
அருகிலிருந்த
அனைவரையும்
சிதைத்து சின்னாபின்னமாக்கியது!
ஆனாலும்
வயிற்றிலே
தீராத தாகத்தை சுமந்த
ஊரேழு மைந்தனின்
நெஞ்சிலே
விடுதலைத்தீ
சுவாலையாய்
எரிந்தது!
இன்றுதான்
ஆண்தாயும்
தன் பிள்ளையை
பார்த்து
தலைகோதி
வகிடெடுத்து
உச்சிமோர்ந்து
சென்றது!!

✍தூயவன்

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments