தியாக தீபத்தின் தீராத தாகம் தீர்பதே நம் கடமை!

You are currently viewing தியாக தீபத்தின் தீராத தாகம் தீர்பதே நம் கடமை!

breaking

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து 26.09.1987 வரை பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


தியாக  தீபம்   திலீபன் வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்  

​நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் எமது உரிமையை மீட்பதற்கான பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.

Everyone living in the land of Tamil Eelam, which I love, should prepare for a great revolution to reclaim our rights

தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகிவிடும்

Tamils must be very vigilant. Otherwise their future will become bleak.

விடுதலைப் புலிகள் வாழ் வேண்டும் என்றோ, ஆளவேண்டும் என்றோ ஆசைகொள்ளவில்லை. எமது மக்களுக்கு நிரந்தரமான, சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராக உள்ளோம்

We the Liberation Tigers of Tamil Eelam do not desire to live or to rule. We are all ready to die if our people can have stable and prosperous futures.

மக்கள் அனைவரும் எழுட்சியடைவார்களாயின் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது.

If all the people rise no one can stop the formation of Tamil Eelam.

எமது உரிமைகளை நாமே வென்றெடுக்கவேண்டும். இதற்கு வேறு யாருடைய தயவையும் எதிர்பார்க்கக்கூடாது.

We have to reclaim our own rights. Don’t expect anyone else to help.

நான் என்னுயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே! உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும்

Oh the people I cherish more than life! I leave you with great responsibility. That you should rise as one. Let a great revolution begin.

எம் எதிர்கால சந்ததி வாழ நிச்சயமாக எமக்கோர் நாடு அவசியம். இல்லாவிட்டால் எங்களைப்போலதான் நாளை எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும்

We certainly need a country for our future generations to live in. Otherwise they will suffer treatment like ours.

நான் ஆத்மரீதியாக உணர்கிறேன். இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் எனது மக்கள் நிச்சயமாக விடுதலையடைவார்கள்.

I have an inner feeling. Even if it’s not today my people will surely be free one day.

ஒரு மாபெரும் சதிவலைக்குள் சிக்கி வரும் எம் மக்களை எப்படியாவது விடுவிக்கவேண்டும்

We have to somehow free our people who are trapped in this huge conspiracy

என் போராட்ட வரலாற்றுச் சாதனைகளையிட்டு நான் மாபெரும் மகிழ்ச்சியும் பூரண திருப்தியும் அடைகிறேன்

I feel great joy and complete satisfaction with my achievements in my struggles’ history

எமது போராட்டத்தை அமைதி தழுவியதாகவே அல்லது இரத்தம் தோய்ந்ததாகவோ அமையவேண்டுமெனத் தீர்மானிக்கவேண்டியவர்கள் இங்குள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்களே

It is the capitalist rulers here who have to decide whether our struggle should be peaceful or bloody.

சுதந்திரத்திற்கு விலையாக எங்கள் உயிரையே கொடுக்கத் தயாராக உள்ளோம்

We are ready to sacrifice our lives for freedom

மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாகத் தமிழீழத்தை எனது இறப்பின் மூலம் பெற்றுத்தரும். இதனை வானத்திலிருந்து இறந்த ஏனைய போராளிகளுடன் நானும் பார்த்து மகிழ்வேன்

Let the people’s revolution break out here. Through my death it will definitely give us Tamil Eelam. I will enjoy watching this from the sky, with the other fighters who also perished.

மரணம் ஒரு தடவைதான் வரும். அதற்காக மானத்தை விற்றுச் சீவிக்கமுடியுமா? இறப்புக்குப் பயந்து இனத்தை அழியவிட முடியுமா?

Death only comes ones. Can you sell your divinity for that? Can the whole race be destroyed because of the fear of death?

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இனவாதப் பூதம் விழுங்கும் போது, இந்தியா எமது நிலைப்பாட்டை ஆதரிக்கவேண்டி ஏற்படும்

India will have to support our position when the  troll of racism swallows the SriLanka – India agreement

எமது மண்ணின் விடுதலைக்காக யார் போராடுகிறார்களோ அவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்.

Those who fight for the freedom of our land are the children of this land

எமது மண்ணின் விடுதலையை நேசிக்காத எவரும் இம் மண்ணை ஆள அருகதையற்றவர்கள்

Anyone who does not love the freedom of our land is unfit to rule this land

முக்கிய  குறிப்பு

இந்திய அரசிடம் முன்வைத்த (15.09.1987 அன்று ) ஐந்து அம்சக் கோரிக்கை

  1. ஐந்து அம்ச கோரிக்கைகள்
1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments