திருகோணமலையில் தொடருந்து மோதி இருவர் பலி!

You are currently viewing திருகோணமலையில் தொடருந்து மோதி இருவர் பலி!

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(22.11.2026) இரவு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதியே இந்த மூவரும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மூவரும் தெவுந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காகத் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply