திருகோணமலை நாதணோடை மக்களை செ.கஜேந்திரன் நேரடியாகச் சென்று சந்தித்தார்!

You are currently viewing திருகோணமலை நாதணோடை மக்களை செ.கஜேந்திரன் நேரடியாகச் சென்று சந்தித்தார்!

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்திற் உட்பட்ட மாவடிச்சேனை- நாதணோடை குளக்கட்டின் அணைக்கு அருகான பகுதியில் தொடர்ச்சியாக பாரிய அளவிலான மணல் அகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நாதணோடை குளக்கட்டிற்கு பாரிய சேதம் ஏற்படும் அச்ச நிலை தோன்றியுள்ளதால்

அப்பகுதி குடியிருப்புக்களுக்கு பாரிய ஆபத்து ஏற்படக் கூடும் என தெரிவித்து

அப்பகுதியில் வாழும் தமிழ் மக்களால் குறித்த மணல் அகழ்வைத் தடுக்குமாறு கோரியும் மணல் அகழ்வுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யக்கோரியும்
அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும்பான்மை சிங்களவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன்

மண் அகழ்வு தொடர்பிலான முறைப்பாட்டை மேற்கொள்ளச் சென்றவர்களது முறைப் பாட்டை ஈச்சிலம்பற்று சிறீலங்கா காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி ஏற்க மறுத்துள்ளதுடன் மக்களை அச்சுறுத்தி அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினரால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொய் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது விடயம் குறித்து திருகோணமலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு மக்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில்

மாவட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று (02.09.2023) சனிக்கிழமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன் அவர்கள் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளதுடன் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்களுடன் திருகோணமலை மாவட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் உட்பட்டோர் கலந்துகொண்டதுடன்

மக்களின் முறைப்பாட்டையும் ஆதங்கத்தையும் கவலையையும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள் கேட்டறிந்துள்ளார்.

அதேவேளை பெரும்பான்மை இனத்தவரான இறேசா ஜானகி பெர்னாண்டோ புள்ளே சிங்கள பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த நபருக்கே

மணல் அகழ்வு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டு மணல் அகழ்வு நடைபெறுவதும் அதற்கு காவல்துறையினர் உடந்தையாகச் செயற்படும் நிலை காணப்படுவதுடன்

குறித்த அணைக்கட்டு பாதிப்பால் ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த (13000) ற்கும் அதிகமான தமிழ் மக்கள் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதேநேரம் நேற்றைய நாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா- கஜேந்திரன் அவர்களால் ஈச்சிலம்பற்று காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரியிடம் குறித்த மணல் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரி முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை நாதணோடை மக்களை செ.கஜேந்திரன் நேரடியாகச் சென்று சந்தித்தார்! 1

திருகோணமலை நாதணோடை மக்களை செ.கஜேந்திரன் நேரடியாகச் சென்று சந்தித்தார்! 2

திருகோணமலை நாதணோடை மக்களை செ.கஜேந்திரன் நேரடியாகச் சென்று சந்தித்தார்! 3

திருகோணமலை நாதணோடை மக்களை செ.கஜேந்திரன் நேரடியாகச் சென்று சந்தித்தார்! 4

திருகோணமலை நாதணோடை மக்களை செ.கஜேந்திரன் நேரடியாகச் சென்று சந்தித்தார்! 5

திருகோணமலை நாதணோடை மக்களை செ.கஜேந்திரன் நேரடியாகச் சென்று சந்தித்தார்! 6

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments