மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க சொல்லி , தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் அவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் வட தமிழீழம் .யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் அவர்களின் நினைவிடத்தில் 15-09-2022 அன்று தொடங்கியது அத்துடன் பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் வரையிலான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியும் அதே நாளில் பொத்துவிலில் ஆரம்பமாகியது
ஐந்தாம் நாளான இன்று (19-09-2022) ஊர்திப் பவனியானது வவுனியாப்பல்கலைக்கழகத்தை அண்மித்த போது மாணவ மாணவியர் தியாகச்செம்மலுக்கு தங்கள் இறுதி வணக்கத்தை செலுத்தினர்















