யாழ்.வடமராட்சி துன்னாலை கோவில் சந்தை பகுதியில் உந்துருளி ஒன்று வேகக் கட்டுப் பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்துடன் மோதிக் கொண்டதில் உந்துருளியில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை,
(20.08.2023) அதிகாலை -1.20,மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் வடமராட்சி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்-நிசாந்தன்(அகவை-28) மற்றும் மன்னாரைச் சேர்ந்த செல்வநாயகம்-வின்சன் (அகவை-34)எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி வளைவில் வேகமாகச் செலுத்தப்பட்ட நிலையில் கட்டுப்பாட்டை மீறிய உந்துருளி மின்கம்பத்துடன் பக்க வாட்டாக மோதுண்டு அதன்
அருகான சாலைப் பால மதகுக்குள்
பாய்ந்து
பலமாக மோதியுள்ளமை அருகிருந்த, cc.tv,கமரா காணொளி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.