துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் அச்சத்தால் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மாலட்யா மாகாணத்தின் யெசில்யர்ட் பகுதி மற்றும் அடியமன் மாகாணம் ஆகியவை நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.