சிரியப்படைகள் நடாத்திய வான் தாக்குதல்களில் 33 துருக்கிய இராணுவத்தினர் பலியானதைதொடர்ந்து, சிரியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான முறுகல்கள் ஆபத்தான நிலைக்குஉயர்ந்துள்ளன.
சிரியாவின் ஆளுமைக்குட்பட்ட “Idlip” பகுதியில் நிலை கொண்டிருந்த துருக்கியப்படைகளேமேற்குறித்த தாக்குதலுக்கு ஆளாகியிருந்தன.
எனினும், சிரியப்படைகளுக்கு சகலவழிகளிலும் உதவியாக இருக்கும் ரஷ்யா, கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என தெரிவித்துள்ளது.
தனது படையினர் பலியாகியதால் கொதித்துப்போயிருக்கும் துருக்கி, இவ்விடயத்தில் மேற்குலகநாடுகளை தனக்கு ஆதரவாக திருப்புவதற்கான அழுத்தங்களை மேற்கொள்கிறது.
இதன் ஒரு கட்டமாக, துருக்கியுடனான ஐரோப்பிய எல்லைகளை துருக்கி இப்போது திறந்துவிட்டிருப்பதால், சிரிய ஏதிலிகள் அந்த எல்லைகளூடாக ஐரோப்பாவிற்கு இடம்பெயர்வதற்கானவழிகளை துருக்கி ஏற்படுத்துவதன் மூலமாக, ஐரோப்பாவிற்கு அழுத்தங்களை கொடுக்க துருக்கிமுனைகிறது.
ஏற்கெனவே சிரியர்கள் உள்ளிட்ட ஏதிலிகளின் வரவால் திணறும் ஐரோப்பா, மேன்மேலும்ஏதிலிகளின் வரவை தாங்க முடியாது என்பதை நன்கு உணர்ந்துள்ள துருக்கி இலாகவமாககாய்களை நகர்த்துகிறது.
இதனிடையே, துருக்கிய இராணுவத்தின்மீதான சிரிய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்முள்ள“NATO” அமைப்பு, தனது முழு ஆதரவையும் துருக்கிக்கு வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், “NATO” நாடுகளின் பிரதிநிதிகளுடனான அவசர கூட்டமொன்றிற்கு “NATO” வின் தலைவர் Jens Stoltenberg அழைப்பு விடுத்துள்ளார்.