தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியாவின் மிகக்கொடிய ‘டெல்டா’ வகை திரிபு பெற்ற வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் கொவிட் மரண வீதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை விட குறைந்தளவான தடுப்பூசி செலுத்தல் வீதம் கொண்ட தென் கிழக்காசிய நாடுகளில், அதிக வீரியம் கொண்ட டெல்டா கொவிட் திரிபு அதிவேகத்தில் பரவி வருகின்றமை மரண எண்ணிக்கை உயர்வடைவதற்கு காரணமாகும் என தெரியவந்துள்ளது.
ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவை காட்டிலும் இரு மடங்கு சனத்தொகை கொண்ட தென்கிழக்கு ஆசிய வலயத்தில் தடுப்பூசி செலுத்தல் வீதம் இன்னமும் 9 சதவீதத்தை கடக்கவில்லை.
இந்த வலயத்தில் கடந்த வாரத்தினுள் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 41 சதவீதத்தினால் அதிகாித்துள்ளது.
இது அதிக தொற்றாளர் எண்ணிக்கையை பதிவுசெய்துள்ள அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கடந்த வாரத்தினுள் பதிவுசெய்த தொற்றாளர் தொகையை காட்டிலும் அதிகமாகும்.
அவ்வாறே, தென் கிழக்கு ஆசியாவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை கடந்த 7 நாட்களினுள், 39 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அவ் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.