எச்சரிக்கை”கொரோனாவுக்கு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுகொள்வது ஆபத்தானது!!

You are currently viewing எச்சரிக்கை”கொரோனாவுக்கு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுகொள்வது ஆபத்தானது!!

கொரோனா தொற்றை தடுக்க இரு வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் காணொலிக்காட்சி வழியாக நிருபர்களிடம் பேசினார்.​அப்போது அவர், “பல நாடுகளில் கொரோனா 2-வது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. 3-வது அலை குறித்த எச்சரிக்கையும் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதம் ஆகும். இங்கே கொரோனா தடுப்பூசிகளைப் பொருத்தமட்டில் ஒரு ஆபத்தான போக்கு உள்ளது. கொரோனா தடுப்பூசிகளை கலந்து போடுவது, பொருத்திப்பார்ப்பதெல்லாம் நடக்கிறது. இது ஆபத்தானது. இது தொடர்பாக நம்மிடம் தரவுகள் இல்லை. ஆதாரங்கள் இல்லை. 2-வது, 3-வது, 4-வது டோஸ் தடுப்பூசிகளை எப்போது யார் போட்டுக்கொள்வது என்று மக்கள் தீர்மானிக்கத்தொடங்கினால், அது நாடுகளில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். இது தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன, அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments