தேசியத்தலைவரின் சிந்தனையும் எண்ணங்களும் என்றைக்கும் தமிழீழத்தை நோக்கியே…

You are currently viewing தேசியத்தலைவரின் சிந்தனையும் எண்ணங்களும் என்றைக்கும் தமிழீழத்தை நோக்கியே…

தேசியத்தலைவரின் சிந்தனையும் எண்ணங்களும் என்றைக்கும் தமிழீழத்தை நோக்கியே……. அன்றொருநாளில்
மாவீர்நாள் நிகழ்வு முடிந்த சிலநாட்கள்,
துயிலுமில்ல நிகழ்வுகளின் புகைப்படங்கள் நூற்றுக்கணக்கில் ,
தேசியத்தலைவரின் பார்வைக்குத் தரப்படுகிறது.

அது
Film roll Camera பயன்படுத்திய
காலப்பகுதி (92/93)

ஒவ்வொரு படங்களாக அண்ணை பார்க்கிறார்,

இப்போது…

இடையில் ஒருபடத்தை தனியாக உற்று நோக்கிப்பார்க்கிறார்,

என்னவொரு அருமையான காட்சி…
அது என்ன ?

அது சுடரேற்றும் கணம்..
துயிலுமில்லப் பாடலை கண்ணீர் மல்கிக் கசிந்துருகிக்
கேட்கும் நேரம்..

பிரதான சுடரும்
ஏனைய எல்லாச்சுடர்களும்
சுடர்விடுகின்றன..

இதோ.. இதோ..

மழை மெல்ல தூறல்
போடுகிறது,

அது இயற்கையின் கண்ணீர்,

அதோ
அந்த மாவீரனின் பெற்றோர்
குடைவிரிக்கின்றனர்,
ஆனாலும் தாம்
மழையில் நனைகின்றனர்.
நனைந்தபடியே
தம் பிள்ளைக்காக ஏற்றிய
சுடர் நனைந்து அணையவிடாதபடி சுடருக்குக்
குடைபிடிக்கின்றனர்,
அதுதான் அந்த காட்சிப்படுத்தல். அதுதான் தலைவரின் கண்களை உற்றுநோக்க வைத்தது.

தியாகத்தினை ஆராதிக்கும்,
பெற்றோர்,
தியாக வணக்கத்தின் அருமையை
அர்ப்பண இரசனை சொட்ட
தேடும் தலைவரின் பார்வை,

மகத்துவம் மிக்க அந்த நாளின் ஒற்றைச் சாட்சியாக
தலைவரின் நெஞ்சை
தொட்டு ஊடுருவி நிறைத்தது எது?

இன்றைக்கு
நம்மை நாமே கேட்போம்
அன்புத் தோழர்களே, இந்தத் தேடல் எம்மிடம் இருக்கிறதா?

தேசியத்தலைவரின் அந்த அபூர்வ தீட்சண்யப்
பார்வையை, தேடலை வளர்த்துக்கொள்வோம்.
எமக்கெல்லாம் தெரியும் நாங்கள் அதைச்செய்தோம். இதைச்செய்தோம் என்னும் வீரப் பிரதாபங்களைத் தவிர்த்து
பார்வையை கூர்மைப்படுத்துவோம், விடுதலையின் திறவுகோல்களைப் பொங்கிசங்களைத் தேடுவோம். எமக்கெதிராகப் போடப்படும் முடிச்சுக்களை, பூட்டுக்களை தேசியத்தலைவரின் சிந்தனை என்னும் திறப்பைக் கொண்டு திறப்போம்.

மழை நம்கட்டுப்பாட்டில்
இல்லைத்தான், ஆனாலும்
குடை நம்கையில்தான் இன்னும் இருக்கிறது. நாங்கள் நனைந்தாலும் எதைக்காக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்போம்.

அந்த அதி உன்னத வேரிலிருந்து வெடித்து முளைத்த கிளைகளாகி
உலகத்திற்கே விடுதலைக் குடைபிடிபோம் .

தன்னைத் தீப்பிழம்பாக வைத்திருக்கும் சூரியன் என்றுமே நனைந்து விடப்போவதில்லை. எதை எங்கே எப்படி முறியடிப்பது என்பது தலைவரின் சிந்தனைக்கும் தெரியும் எமக்கும் தெரியும் . ஏனெனில் நாமெல்லோரும் தலைவரின் சிந்தனையை உள்வாங்கியுள்ளோம்.கண்ணுக்குத் தெரியாத ஒரு மாபெரும் போர் எம்மீது தொடுக்கப் பட்டுள்ளது. எமது பக்கத்தில் பலம் மிக்க ஆயுதமாகத் தேசியத்தலைவர் பிரபாகரன் சிந்தனையென்னும் போராயுதம்….. எதிரியின் பக்கம் என்னென்ன இருந்தாலும் எமக்கென்ன…….

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments