தையிட்டி சட்டவிரோத  விகாரைக்கு எதிரான தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்!

You are currently viewing தையிட்டி சட்டவிரோத  விகாரைக்கு எதிரான தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்!

வட தமிழீழம் தையிட்டி சட்டவிரோத  விகாரைக்கு எதிரான தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் ஜூலை 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 28, 2026 அன்று மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையும், மறுநாளான ஜூலை 29, 2026 பெளர்ணமி தினத்தில் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply