தொடர்ந்து 3வது நாளாக 33 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள்: மொத்த தொற்று 16 இலட்சத்தை கடந்தது!

You are currently viewing தொடர்ந்து 3வது நாளாக 33 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள்: மொத்த தொற்று 16 இலட்சத்தை கடந்தது!

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மூன்றாவது நாள் 33 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுள்ளதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 16 இலட்சத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

நேற்று (மே-17) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 33 ஆயிரத்து 75 ஆக பதிவாகியதன் மூலம் மூன்றாவது நாளாக 33 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 150 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 86 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 4 இலட்சத்து 44 ஆயிரத்து 371 ஆகவும் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 5 ஆயிரத்து 851 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 16 இலட்சத்து 31 ஆயிரத்து 291 ஆக அதிகரித்து முதல் முறையாக 16 இலட்சத்தை கடந்து உச்சம் பெற்றுள்டளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 335 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையான நாட்களில் ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகிய நாளாக அமைந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்து 18 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 596 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments