தொற்று நோயாளர் திடீர் அதிகரிப்புக்கு காரணம் என்ன? அதிகாரிகள் விளக்கம்!

You are currently viewing தொற்று நோயாளர் திடீர் அதிகரிப்புக்கு காரணம் என்ன? அதிகாரிகள் விளக்கம்!

இலங்கையில் இதுவரை இல்லாதளவு அதிகளவாக நேற்று 2,672 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவான நிலையில் இந்த சடுதியான அதிகரிப்புக்கு கடந்த சில நாட்களாக வெளியிடப்படாமல் இருந்த முடிவுகளையும் இணைந்து வெளியிட்டமையே காரணம் என சுகாதார அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக பி.சி.ஆா். பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சில ஆய்வக முடிவுகளை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அவை நேற்றைய முடிவுடன் இணைத்து வெளியிடப்பட்டதாகவும் அவா்கள் கூறியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நாளாந்தம் 15,000 ஆயிரம் முதல் 20,000 வரை பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாத் தொற்றுக்குள்ளாகிய மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments