நடுரோட்டில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: கண்டுகொள்ளாத பொதுமக்கள்!

You are currently viewing நடுரோட்டில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: கண்டுகொள்ளாத பொதுமக்கள்!

12 வயதான சிறுமி ஒருவர், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த நவம்பர் 10- ஆம் தேதி, மதியம் 12 மணிக்கு சிறுமி டீ வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அதே கடையில், பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த தம்பதி நின்று கொண்டிருந்தனர்.

இந்த சிறுமியை பார்த்த கணவன் மனைவி இருவரும், சிறுமியை அருகில் இருந்த மரம் ஒன்றில் கட்டி வைத்து அடித்துள்ளனர். ஆனால் அருகில் இருந்த யாரும் சிறுமியை கண்டுக்கொள்ளவில்லை. அதே சமயம், இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அழுது கொண்டிருந்த சிறுமியின் கட்டுகளை அவிழ்த்து விட்டனர்.

நடந்த சம்பவத்தை குறித்து விசாரித்த போது, சிறுமி தாக்கிய பெண் கூறியதாவது: “நான் கூலி வேலை செஞ்சு என் மகன் படிப்புக்காக வாங்கிய செல்போனை இந்தப் புள்ள திருடிட்டா. அதனால தான் கட்டி வச்சேன்” என்று கூறியுள்ளார். மேலும், பருப்பு, எண்ணெய், எழுமிச்சம்பழம், தேங்காய் போன்ற பொருள்களையும் சிறுமி எடுத்துச் சென்றுவிடுவதாக கூறினார். இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது, “பசிக்கு புரோட்டா வாங்கித்திங்க செல்போனை எடுத்தேன். எங்க வீட்ல தான் இருக்கு” என்று சொல்லிக் கொண்டே உதட்டில் வடிந்த ரத்தத்தை துடைத்தார். சிறுமியின் வீட்டில் இருந்த செல்போனை காவல்துறையினர் கைப்பற்றினர்.

சிறுமியின் தாய், தந்தை ஒரு சின்ன கீற்றுக் கொட்டகையில் குழந்தைகளுடன் தங்கி கூலி வேலை செய்கிறார்கள். கஜா புயலில் பாதி கொட்டகை சேதமடைந்த நிலையில், கரோனாவால் கட்டிட வேலை இல்லாமல் தந்தை வீட்டில் இருக்கிறார். தாய் தினசரி கூலி வேலைக்கு போனால் தான் சாப்பாடு. சில வருடங்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை மீது திருட்டு வழக்கு பதிவாகி சிறைக்கு சென்று வந்தவர் தான் என்றாலும் சிறுமி ருசியான உணவுக்காகவும், பசிக்காகவும் செல்போனை எடுத்திருக்கிறாள். திருடியது குற்றமாக இருந்தாலும், சிறுமி என்றும் பாராமல், ரத்தம் வரும் அளவுக்கு அனைவர் முன்பும் சிறுமியை அடித்தது ஏற்றகமுடியாத செயலாக உள்ளது. மேலும், ந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் காவல்துறையினரும், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments