நீங்கள் ஜேவிபி இல்லை என்றால் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணைக்கு உடன்படுங்கள்!

You are currently viewing நீங்கள்  ஜேவிபி இல்லை என்றால் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணைக்கு உடன்படுங்கள்!
பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் பாராளுமன்றில் நேற்று 18-11-2025 செவ்வாய்க்கிழமை திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை
சுருக்க வடிவம்.
➡️கடுமையான யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இருந்ததை விட அதிகமான இராணுவப் பிரசன்னம் இருக்கின்ற இந்தக் காலத்தில் தான் வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பயன்பாடு அதிகம் பரவ விடப்படுகின்றது
➡️யுத்தம் நடைபெற்ற காலத்தில் புரட்சிக்கு எதிரான திட்டம் என்கிற பெயரில் போதை பொருளை தமிழ்ச் சமூகத்தினுள் பரவவிடும் திட்டம் இராணுவ தரப்பினால் கைக்கொள்ளப்ப்டது. இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் பிரசன்னம் இருந்த காரணத்தினால் இராணுவ கட்டப்பாட்டுப் பிரதேசத்திலும் கூட புலிகளின் உள்ளார்ந்த ஆளுகை இருந்த காரணத்தினால் போதை பொருள்பயன்பாட்டை தமிழ் பிரதேசங்களில் தமிழ்ச் சமூகம் மத்தியில் பரப்பும் இராணுவத்தின் திட்டம் வெற்றியளிக்கவில்லை
➡️ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ்ர் தாயக மண்ணில் மிக அதிகளவில் ஆகிரமித்து நிலைகொண்டுள்ள இராணுவத்தின் அனுசரணையில் தமிழர் பிரதேசங்களில் மிக அதிகளவில் போதை பொருள் பரவலாக்கப்பட்டுள்ளது. இதில் இராணுவத்தின் பங்கு இல்லை என நீங்கள் எவரையும் ஏமாற்ற வேண்டாம்
➡️தமிழ் மக்களால் அதிஉச்சளவில் வெறுக்கப்படுகின்ற இரண்டு அமைச்சுகளில் சிறீலங்காவின் இந்த பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய இரண்டும் முதன்மையானவையாகும்.
➡️என்னைப் பொருத்தவரையும் இந்த உலகத்தை பொறுத்தவரையும் சிறீலங்கா இராணுவத்தினரால்; தமிழ் மக்கள் மீது கொடூரமான ஒரு இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. நீங்கள் சிறீலங்கா இராணுவம் வடக்கு கிழக்கில் மிகச்சிறந்த பணியை ஆற்றுகின்றது என்று சொல்கின்றீர்கள். உங்களது இராணுவத்தின் பெயரை நீங்கள் பாதுகாக்க விரும்பினால் இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்தது உங்கள் ராணுவத்தை விடுவிக்க விரும்பினால் அதற்கான ஒரே வழி சர்வதேச விசாரணைக்கு ஒத்துக் கொள்வது மட்டுமேயாகும்.
➡️அனைத்து இராணுவத்தினரும் குற்றம் செய்தவர்கள் என்று நான் கூறவில்லை அந்த இராணுவத்தில் இருந்தவாறு இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொடூர குற்றங்களை கண்டு சகிக்க முடியாத சிலராலேயே யுத்த குற்றங்கள் பற்றிய காணொளிகள் வெளியே கசியவிடப்பட்டன.
➡️ இராணுவத்தினர் மீதான இந்தக் குற்றச்சாட்டை தவிர்க்க விரும்பினால் தயவு செய்து சர்வதேச விசாரணைக்கு ஒத்துழையுங்கள்
➡️ஆனால் இந்த ஜேவிபி அரசும் அப்படியான ஒரு சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்பாது. ஏனெனில் நடைபெற்ற யுத்தத்தில் இழைக்கப்பட்ட அனைத்து கொடூரங்களிலும் இராணுவத்தினருக்கு பங்கு இருக்கின்றது என்பது அவர்களுக்கும் தெரியும்.
➡️ மஹிந்த ராஜபக்ஷ இறுதி இனவழிப்புப் போரை நடாத்திமுடிப்பதற்கு இனவாதத்தை மட்டும் மூலதனமாக்கிய போது அதனை சிங்கள மக்கள் மத்தியில் தீவிரமாக பிரசாரப்படுத்தி மக்கள் மயப்படுத்தி சிங்கள மக்களின் ஊர் ஊராகச் சென்று ஒவ்வொரு இராணுவ முகாம் முகாமாக சென்றும் அப்பாவிச் சிங்கள் இளைஞர்களையும் இராணுவத்தையும் சிங்கள மக்களையும் இந்த இனவழிப்பு யுத்தத்திற்கு தயார்படுத்தியது உங்கள் முன்னாள் தோழர் விமல் வீரவன்சவும் மற்றும் இப்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் மற்றும் இங்கு முன் வரிசையில் இருக்கும் ஜேவிபி தோழர்களும் தான்.
➡️ நீங்கள் செய்த இனவழிப்புக் கொடூரங்கள் அனைத்தும் எம் மனதில் ஆறாத வடுவாக இன்னமும் நினைவில் நிற்கிறது. நாங்கள் அதை ஒருபோதும் மறக்கவும் மன்னிக்கவும் போவதில்லை என்றாலும் நீங்கள் செய்த பழைய பாவங்களை கழுவி நீங்கள் பழைய ஜேவிபி இல்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்பின் செய்த குற்றங்களுக்காக ஒரு பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணைக்கு உடன்படுங்கள்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply