சிறீலங்கா சனாதிபதியுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சந்திப்பு!

You are currently viewing சிறீலங்கா சனாதிபதியுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சந்திப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாபதி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள்,உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்

வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி சி.வி.கே. சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீ தரன், எஸ். ராசமாணிக்கம், பி. சத்தியலிங்கம், ஜி. ஸ்ரீ நேசன்,ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ஆனால்

ஒன்றரை மணி நேரங்கள் கலந்துரையாடல் நடந்ததாகவும் ஒன்றை மனத்தியாலங்கள் கதைத்ததை ஐந்து நிமிடத்தில் சொல்ல முடியாது என்றும்  சுமந்திரன். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதன் பின்னணி என்னவென்று சொன்னால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை இப்போது தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களின் எதிர்ப்புகள் அவர்களுக்கு உருவாகுவதை தடுப்பதற்கு வழமை போலவே தமிழரசு கட்சி எல்லா அரசாங்கத்துக்கும் பச்சை கொடி காட்டுவது போன்று பொது ரகசியமான பேச்சு வார்த்தைகளை முடித்துவிட்டு
மக்கள் இந்த அரசாங்கத்தில் இருக்கும் கோபத்தில் இருந்து விடுபடுவதற்காக நாங்கள் அதை கதை திருக்கிறோம் இதை கதைத்திருக்கிறோம் ஜனாதிபதி அதை செய்வேன் என்று சொல்லி இருக்கிறார் என்று சொல்லி. சுமந்திரன் மறுபடியும் மக்களை ஏமாற்றும்   ஊடக சந்திப்புக்களில் இறங்கி இருப்பது ஆச்சரியப்படக் கூடிய விடயம் இல்லை.
ஆனால் மக்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும் ஒன்றரை மனத்தியாளங்கள் ஜனாதிபதியுடன் கதைக்க நேரம் ஒதுக்கிய உங்களுக்கு அந்த ஒன்றரை மணித்தியாலங்கள் மக்களுக்கு தாங்கள் கதைத்ததை விளங்கப்படுத்துவதற்கு முடியவில்லை என்றால். இதற்கான காரணம் இங்கு கதைத்தது ஒன்றும் மக்களுக்கான சொல்லக்கூடிய நிகழ்வுகள் அல்ல.என்பது மீண்டும் மீண்டும் சிறீலங்கா அரசாங்கங்களுக்கு வெள்ளையடிக்கும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply