8ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்!

You are currently viewing 8ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்!
8ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்! 1

09/09/2021 காலை பசுத்தோன் , பெல்சியம் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் 580 Km கடந்து லுக்சாம்பூர்க் நாட்டினை வந்தடைந்தது. இன்றைய பயணத்தில் மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வராக அங்கம் வகிக்கும் யேசி அரேன்சு அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனையும் தமிழர்களுடைய வரலாற்று பூர்வீகம நிலம் தமிழீழமே என்றும் எமக்கான நிரந்த்ர தீர்வாக தமிழீழத் தேசத்தின் சுதந்திரமே அமையும் என்று வலியுறுத்தப்பட்டது. சம நேரத்தில் பெல்சியப் பாராளு மன்றத்தில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என தாம் வலியுறுத்தி தீர்மானம் ஒன்றினை இயற்றுவதற்கு ஆவன செய்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்த அர்லோன் மாநகர சபையில் நடைபெற்ற சந்திப்பிலும் ஊடகங்களின் முக்கியத்துவத்தினையும் சிங்களப் பேரினவாத அரசினை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சிடம் தாம் அழுத்தம் தெரிவித்துக்கொண்டு இருப்பதாகவும். மேலும் தமிழர்களின் போராட்டத் தொடர்ச்சியே தன் முயற்சிக்கும் வலுச் சேர்க்கும் என தன் கருத்தை பகிர்ந்து கொண்டு. தமிழர்களின் விடுதலைக்காக போராடும் வாய்பு தனக்கு கிடைத்ததை இட்டு மகிழ்வுறுவதாகவும் குறிப்பிட்டார்.

8ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்! 2
8ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்! 3

அர்லோன் மா நகரத்தில் இருந்து புறப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் லுக்சாம்பூர்க் நாட்டினையும் ஊடறுத்து பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

8ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்! 4

“விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்”

  • தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments