நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் நினைவெழுச்சி நிகழ்வு!

You are currently viewing நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் நினைவெழுச்சி நிகழ்வு!

ஒசுலோவில் இன்று தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவெழுச்சி மண்டபம் நிறைந்த மக்களோடு இளையோர்களால் உணர்வெழுச்சியோடு நினைவேந்தப்பட்டது.

தியாகதீபத்தின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நோர்வே தலைநகர் ஒஸ்லோவை அடுத்துள்ள Frogner என்ற இடத்திலிருக்கும் கலாச்சார மண்டபத்தில் 01.10.2023, ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தப்பட்டது…

நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இந்த நிறைவேந்தலுக்கான மேற்பார்வை செய்திருந்த நிலையில், இளையோர்களே நினைவேந்தலை ஒருங்கமைத்து, அனைத்து அரங்க நிகழ்வுகளையும் உணர்வுபூர்வமாக நிறைவாக்கினார்கள்…

நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் நினைவெழுச்சி நிகழ்வு! 1

பெரியவர்களை இருக்கைகளில் அமரவைத்துவிட்டு, முற்று முழுதாக தாங்களே அரங்காளர்களாக சுற்றிச்சுழன்று, நிகழ்வுகள் மூலமாக, அந்த தியாகதீபம் நம்மண்ணில் காற்றாய் சுற்றிச்சுழன்ற பொற்காலத்தின் நினைவலைகளுக்குள் எம்மை தக்க வைத்தமை, தியாகதீபம் நம் இளையோருக்குள் இன்னமும் வாழ்கிறான் என்றே கருதத்தோன்றுகிறது…

 

நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் நினைவெழுச்சி நிகழ்வு! 2

தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது, அணிவகுத்ததாகட்டும், மலர்வணக்கத்தை ஒழுங்குபடுத்தியதாகட்டும், நடன உருவகங்கள் மூலமாக, தியாகதீபத்தை முன்னிறுத்தியதாகட்டும், இசையூடாக தியாகதீபத்தை நினைவேந்தியதாகட்டும், தியாகதீபம் பற்றிய வரலாற்றை கண்காட்சியாக மண்டபத்தில் உருவகித்ததாகட்டும், நிகழ்வுகளை தொகுத்து வழங்கியதிலாகட்டும் அனைத்திலும் தியாகதீபம் வாழ்ந்தான்…

 

நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் நினைவெழுச்சி நிகழ்வு! 3

நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் நினைவெழுச்சி நிகழ்வு! 4

நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் நினைவெழுச்சி நிகழ்வு! 5

நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் நினைவெழுச்சி நிகழ்வு! 6

நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் நினைவெழுச்சி நிகழ்வு! 7

நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் நினைவெழுச்சி நிகழ்வு! 8

நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் நினைவெழுச்சி நிகழ்வு! 9

நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் நினைவெழுச்சி நிகழ்வு! 10

 

தாயகம் தாண்டி, புலம்பெயர் தேசங்களில் இளையோர் சரியான பாதையில் வழிநடத்தப்படுவது மனதுக்கு நம்பிக்கையாகவும், 2008 ஆம் ஆண்டு தனதுரையில், நம் கரிகாலன் வெளிப்படுத்திய அவாவை சிரமேற்தாங்கி பயணிக்கிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்தியது…

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments