பங்களாதேஷில் வெடித்தது போராட்டம் ! 100 இற்கும் அதிகமானோர் படுகாயம்.

You are currently viewing பங்களாதேஷில் வெடித்தது போராட்டம் ! 100 இற்கும் அதிகமானோர் படுகாயம்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகளால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்போராட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் தலை வெட்டப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அடுத்த ஆண்டு பங்களாதேஷில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தேசியவாத கட்சி பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளது.

பிரதமர் பதவி விலகினால் தான் நியாயமான தேர்தல் நடைபெறும் என்று கூறுவதை ஆளும் கட்சியான பங்களாதேஷ் அவாமி லீக் மறுக்கின்றது.

இதையடுத்து, டாக்காவின் அனைத்து தெருக்களிலும் அமைதிப் போராட்டம் நடத்த பங்களாதேஷ் தேசியவாத கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் போராட்டத்தில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த போராட்டங்கள் காரணமாக காவல்துறையினருக்கும் எதிர்கட்சிக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்துள்ளனர் . இந்த மோதலில் காவல்துறை அதிகாரி ஒருவரின் தலை வெட்டப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் அதிகமானவர்கள் படுகாமடைந்துள்ளனர்.

மேலும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியைச் சேர்ந்த 1,680க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், டாக்காவில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments