பலத்த வீழ்ச்சியை சந்திக்கும் நோர்வேயின் எண்ணெய் வள நிரந்தர நிதியம்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing பலத்த வீழ்ச்சியை சந்திக்கும் நோர்வேயின் எண்ணெய் வள நிரந்தர நிதியம்! “கொரோனா” அதிர்வுகள்!!

பெட்ரோலிய ஏற்றுமதியில் கொடிகட்டிப்பறக்கும் ஐரோப்பிய நாடான நோர்வேயின், பெட்ரோலிய வர்த்தகம் மூலம் கிடைக்கப்பெரும் வருவாய் அத்தனையும், உள்ளூரின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படாமல், வெளி நாடுகளில் நிரந்தர வைப்புக்களில் வைக்கப்பட்டும், வேறும் பலன்தரக்கூடிய விடயங்களில் முதலீடு செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய தேவைகள் ஏற்படும் வேளைகளில் மாத்திரம் அந்த நிதியத்தின் வட்டித்தொகையிலிருந்து குறிப்பிட்ட ஒரு சிறுதொகை மாத்திரம் பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது வழமை. குறிப்பாக 2007 – 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகளாவிய ரீதியிலான பொருளாதார சரிவின்போது, பல்வேறு உலகநாடுகளும் ஐரோப்பாவும் நெருக்கடிநிலையை சந்தித்தபோதும், இந்த நிரந்தர நிதியத்தின் காரணமாகவே, நோர்வே மிகக்குறைந்த சேதாரங்களோடு தப்பித்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

எனினும், தற்போது “கொரோனா” வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையையடுத்து உலகெங்கும் உருவாகியுள்ள பொருளாதார மந்தநிலையின் காரணமாக, நோர்வேயின் இந்த நிரந்தர நிதியத்தின் வட்டி வருமானத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயின் அரசாங்க ஓய்வூதிய நிதியத்தின் கணக்கெடுப்புக்களின்படி, சுமார் 14.6 சத விகித வீழ்ச்சி காணப்படுவதாகவும், இது சுமார் 1350 பில்லியன் நோர்வே குறோணர்களுக்கு சமானமானதுமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள