“Vivaldi” நோர்வே உலாவி : கண்காணிப்பைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வெளிவந்தது பதிப்பு 3.0!

  • Post author:
You are currently viewing “Vivaldi” நோர்வே உலாவி :  கண்காணிப்பைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வெளிவந்தது  பதிப்பு 3.0!

நோர்வே உலாவி “Vivaldi”, கைத் தொலைபேசியில் பாவிக்கும் வகையில் பதிப்பு 3.0 செயலியாக வெளிவந்துள்ளது. Android செயலி பதிப்பை இப்போது அதிகாரப்பூர்வமாக “Play Store” இலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

கைத்தொலைபேசி “VIvaldi” வெளியீடானது பல பயனர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்றும், கைத்தொலைபேசியில் உள்ள Vivaldi, கணினி பதிப்பில் நீங்கள் காணும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும், குறிப்பாக வேக அழுத்தி (Speed Dials), புத்தககுறி (Bookmark), ஒத்திசைவு (Synchronization), கடவுச்சொற்கள்(Password), உலாவி தரவு சேமிப்பு மற்றும், பதிப்பு 3.0 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கண்காணிப்பு அம்சம் ஆகியவை இதில் உள்ளடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது .

VIVALDI 3.0 :-
விவால்டி 3.0 இல், இணைய கண்காணிப்பைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தனியுரிமையை மையமாகக் கொண்ட தேடுபொறி “DuckDuckGo” போன்ற, அதே தடுப்பு பட்டியலைப் பயன்படுத்துவதன் மூலம் இது, இணைய ஆக்கிரமிப்பு கண்காணிப்பாளர்களிடமிருந்து பயன்படுத்துவோரை பாதுகாக்கும். இந்த பொறிமுறைகள் பின்னணியில் செயல்பட்டாலும் உலாவியின் வேகத்தை பாதிக்காது.

Vivaldi and DuckDuckGo

மற்றொரு பயன்பாடு ஏதெனில், உள்ளமைக்கப்பட்ட விளம்பரத் தடுப்பி ஆகும். இது, இயல்பாகவே முடக்கப்பட்டிருக்கும், இது இயக்கப்படும்போது பயன்படுத்துவோருக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்க விளம்பரங்களைத் தடுக்க அனுமதிக்கின்றது.

தரவிறக்கம் செய்ய : Google play , Windows

மேலதிக தகவல் : Dinside.no

பகிர்ந்துகொள்ள