பல்கேரியா அரசின் அறிவிப்பால் அதிர்ந்துபோன புடின் அரசு!

You are currently viewing பல்கேரியா அரசின் அறிவிப்பால் அதிர்ந்துபோன புடின் அரசு!

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பயணிக்க இருந்த அரச விமானத்திற்கு பல்கேரியா அரசு தனது விமான பாதையை வழங்க மறுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் 100 நாள்களை கடந்து தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளின் கண்டனங்கள் மற்றும் பொருளாதார தடைகளை ரஷ்ய அரசாங்கம் சந்தித்து வருகிறது..

இந்தநிலையில், அரசுமுறைப் பயணமாக செர்பியாவிற்கு செல்ல இருந்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் விமானத்திற்கு பல்கேரிய அரசு அதன் வான் பாதைகளை பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது.

ரஷ்யா மீதான ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த முடிவை பல்கேரிய அரசு எடுத்துள்ளது, மேலும் இந்த தகவலை பல்கேரியாவிற்கான ரஷ்ய தூதர் எலியோனோரா மிட்ரோஃபனோவா அறிவித்தார்.

மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் பல்கேரியா ஆகிய அனைத்து நாடுகளும் அவர்களின் வான்வெளியை ரஷ்யா பயன்படுத்துவதை மறுக்க திட்டமிட்டுள்ளதால், செர்பியாவிற்கு அதிகாரியின் வருகை கேள்விக்குறியாக இருப்பதாக செர்பிய செய்தித்தாள் நோவோஸ்டி தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments