கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக சிங்கள பௌத்த பேரினவாதம் காடுகளை வெட்டி பல ஏக்கர் காணிகளை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் காடுகளை வெட்டுபவர்களிடம் சென்று விசாரித்த போது அவர்கள் பதிலளிக்கவில்லை.
இந்த பிரச்சினை தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், பளை சிறீலங்கா காவல்துறை, கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.