பள்ளமடு விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

You are currently viewing பள்ளமடு விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி, பள்ளமடு பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மன்னார் – யாழ். பிரதான வீதியூடாக பயணித்த சிறிய ரக பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் போது கோயில் குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments