பழி தீர்ப்பது உறுதி என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில்:இஸ்ரேலுக்கு கடும் மிரட்டல் விடுத்த ஈரான்!

You are currently viewing பழி தீர்ப்பது உறுதி என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில்:இஸ்ரேலுக்கு கடும் மிரட்டல் விடுத்த ஈரான்!

பழி தீர்ப்பது உறுதி என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களால் அடிப்போம் என்று ஈரானும் பதிலுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பழி தீர்ப்போம், விட்டுவிட மாட்டோம் என இஸ்ரேல் இன்று தெரிவித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஈரானிய பாதுகாப்புத் தலைவர் Abolfazl Amouei தெரிவிக்கையில், தங்கள் தாக்குதலுக்கு பதிலடி தரலாம் என்று இஸ்ரேல் முயற்சிக்கும் என்றால், இதுவரை எப்போதும் தாங்கள் பயன்படுத்தாத ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Abolfazl Amouei எந்த வகையான ஆயுதம் குறித்து தெரிவிக்கிறார் என்பதில் விளக்கப்படவில்லை. அடுத்த முடிவெடுக்கும் முன்னர் இஸ்ரேல் தீவிரமாக ஆலோசனை செய்வது முறையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் கண்டிப்பாக பதிலடி தருவோம் என உறுதிபட தெரிவித்துள்ளது. இதுபோன்ற ஒரு தாக்குதலை எதிர்கொண்ட பின்னர் இஸ்ரேல் ஒருபோதும் பொறுமை காத்ததில்லை. ஈரானை விட்டு விடுவதாக இல்லை என்றும் இஸ்ரேல் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பதிலடி தருவது குறித்து இஸ்ரேல் உரிய நேரத்தில் முடிவெடுக்கும், ஆனால் பழி தீர்ப்பது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு, ஈரான் குறைந்தது 330 பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் இஸ்ரேலைத் தாக்கியது.

முதல் முறையாக தமது எதிரியை ஈரான் நேரிடியாக தாக்கிய சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. டமாஸ்கஸ் நகரில் ஈரானிய துணைத் தூதகரம் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டிப்பாக பதிலடி உறுதி என்ற் ஈரான் கூறி வந்தது.

ஆனால் இஸ்ரேலின் பலமான பாதுகாப்பு அரணை ஈரானால் முறியடிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு அரண், பிரித்தானியா உள்ளிட்ட நேச நாடுகளின் போர் விமானங்கள் ஆகியவையால் 99 சதவிகித தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.

இதனிடையே, ஈரானின் துணை வெளிவிவகார அமைச்சர் Ali Bagheri தெரிவிக்கையில், எதிரி இன்னொரு தவறை செய்தால், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு 12 நாட்கள் அவகாசமல்ல, ஈரானின் பதில் என்பது சில நொடிகளில் இருக்கும் என்றார்.

மேலும், பதிலடி என்பது 10 மடங்கு அதிக ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments