பாகிஸ்தானில் சிங்கள இளைஞன் நடுரோட்டில் எரித்துக் கொலை!

You are currently viewing பாகிஸ்தானில் சிங்கள இளைஞன் நடுரோட்டில் எரித்துக் கொலை!

பாகிஸ்தான்– இஸ்லாம் மதத்தை இழிவு படுத்துவதாக கூறி, சிறீலங்காவை சேர்ந்த சிங்கள இளைஞர் நடுரோட்டில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிங்கள இளைஞர்

சிறீலங்காவை சேர்ந்த பிரியந்தா குமாரா. சிங்களரான இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். 

இஸ்லாம் மதத்தை

இவர் இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தியதாகக் கூறி, அந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து, அவரை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவரை சாலைக்கு இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.

தீ வைத்து எரித்தனர்

100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே சிங்கள இளைஞர் பிரியந்தா குமரா உயிரிழந்தார். அந்த நபர் இறந்த பிறகும் வெறி அடங்காமல் அந்த கும்பல் சாலையின் நடுவே தீ வைத்து எரித்தனர், மேலும் அங்கு நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போனது 

50 பேர் கைது

விரைந்து வந்த காவல்துறையினர் கூட்டத்தை அடித்து கலைத்தனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் தெஹ்ரீக்- ஏ -லைப்பைக் பாகிஸ்தான் என்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. முதல் கட்டமாக இதில் தொடர்புடைய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் ஹாசன் கவார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர்

இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். இதில் தொடர்புடைய அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply