பாரிஸில் யூத விரோத எதிர்ப்பு பேரணி: ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்த பிரான்ஸ் பிரதமர்!

You are currently viewing பாரிஸில் யூத விரோத எதிர்ப்பு பேரணி: ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்த பிரான்ஸ் பிரதமர்!

பிரான்சில் யூத விரோதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அணிவகுத்து சென்ற பல்லாயிரக்கணக்கான மக்களுடன், பிரதமர் எலிசபெத் போர்ன் உட்பட பிரெஞ்சு அரசியல் பிரமுகர்கள் இணைந்தனர். காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு இடையில் யூத விரோதம் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் யூத மக்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் யூத விரோதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி வகுத்து சென்றனர்.

அவர்களுடன் பிரதமர் எலிசபெத் போர்ன், பல இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தீவிர வலதுசாரி தலைவர் மரின் லு பென் ஆகியோர், பலத்த பாதுகாப்புக்கு இடையில் கலந்து கொண்டனர்.

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிகளான பிரான்சுவா ஹாலண்டே மற்றும் நிக்கோலஸ் சர்கோசி ஆகியோரும் இந்த அணிவகுப்பில் காணப்பட்டனர்.

இந்த பேரணியில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கலந்துகொள்ளவில்லை. எனினும் அவர் தனது ஆதரவினை ஆர்ப்பாட்டத்திற்கு வெளிப்படுத்தினார்.

அத்துடன் ‘கட்டுப்பாடற்ற யூத விரோதத்தின் தாங்க முடியாத மீள் எழுச்சிக்கு எதிராக குடிமக்கள் எழ வேண்டும்’ என அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பாவிலேயே அதிக யூத மக்கள்தொகையை பிரான்ஸ் கொண்டுள்ளதாக யூத கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments