உத்தரபிரதேச மாநிலம் பகாபத்தில் சிலர் பிணங்களை தோண்டி எடுத்து துணிகளை திருடி விற்று வந்தனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் பரவியது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஒரு கும்பலே இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிணங்களை புதைத்ததும் இவர்கள் சென்று அதை தோண்டி எடுப்பார்கள். உடலில் போர்த்தப்பட்ட புது துணிகள், சேலைகள், ஆடைகளை எடுத்து சென்று விடுவார்கள்.
பின்னர் அதை சுத்தம் செய்து புதிய துணி போல மாற்றி முக்கிய ஆடை நிறுவனத்தின் முத்திரைகளை பதித்து விற்பனை செய்து விடுவார்கள். அந்த கும்பலை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 520 போர்வைகள், 127 குர்தாக்கள், 52 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது கொரோனா காலம் என்பதால் கொரோனா நோயாளிகளையும் புதைக்திருக்கிறார்கள். அவர்கள் உடலையும் தோண்டி எடுத்து திருடி இருக்கலாம் என கருதப்படுகிறது.