பிரான்சில் செல்பேசியிலும் வெளியே செல்லும் அத்தாட்சிப் பத்திரம் !

You are currently viewing பிரான்சில் செல்பேசியிலும் வெளியே செல்லும் அத்தாட்சிப் பத்திரம் !

பிரான்சில் வெளியே செல்லும் அத்தாட்சிப் பத்திரமானது, எதிர்வரும் 06ம் திகதி முதல் செல்பேசியிலும் உபயோகப்படுத்தும் முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்போது அறிமுகப்படுத்தப்படும் இந்தச் செயலி, மிகவும் பாதுகாப்பானது. இதில் உங்கள் தரவுகளுடன், புறப்படும் நேரம், காரணம் என்பன நிரப்பப்பட்டவுடன் அது ஒரு QR CODE இனை உருவாக்கும்.

பிரான்சில் செல்பேசியிலும் வெளியே செல்லும் அத்தாட்சிப் பத்திரம் ! 1

தெலைபேசியயைத் தொடாமல், தங்கள் கருவி மூலம் QR CODE இனைக் காவற்துறையினர் SCAN செய்யும் போது, அவர்கள் அனைத்துத் தரவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்,எத்தனை மணிக்கு இந்த அத்தாட்சிப் பத்திரம் நிரப்பப்பட்டது என்றும் காவற்துறையினர்க்குத் தெரியும்
அதனால் நேர்மையாக உபயோகிக்கும்படி உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் எதிர்வரும் 15ம் திகதி ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள